2026 September 6, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

மன்னாரில் 18வது நாளாக தொடரும் போராட்டம்.

உள்ளூர்August 20, 2025 · 1 year முன்0
மன்னாரில் 18வது நாளாக தொடரும் போராட்டம்.

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக இன்றைய தினம் புதன்கிழமை (20) 18 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் கொக்குபுடையான் கிராம மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய தினம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரம் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் முகமாக மக்கள் போராட்ட முன்னனியினரும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

மேலும், மன்னார் மக்களின் உரிமைக்காக சிங்கள,மற்றும் தமிழ் மக்களை ஒன்று திரட்டி இம்மாதம் 23,24 ஆம் திகதிகளில் கண்டி மாவட்டத்தில் இருந்து கிரிபத்கொட வரை ஒரு நடைபவணி ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற உள்ளதாகவும் மக்கள் போராட்ட முன்னனியினர் தெரிவித்துள்ளனர்.