அரச வழக்குகளை கண்காணிக்கும் LMS கட்டமைப்புக்கு Merit Award.

பிரஜையை மையமாகக் கொண்ட, தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய உறுதியான அரச சேவையைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் நவீன டிஜிட்டல் கட்டமைப்புகளுக்காக, ‘தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப விருது விழா 2026’ இல் தங்கப்பதக்கமும் தகைமை விருதும் கிடைத்துள்ளன.
தேசிய சிறந்த மென்பொருள் விருது (NBQSA) வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரித்தானிய கணனிச் சங்கத்தின் (BCS) இலங்கை கிளை ஏற்பாடு செய்திருந்த இந்த விருது வழங்கும் விழா, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (25) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள ‘மொனாக் இம்பீரியல்’ ஹோட்டலில் நடைபெற்றது.
சர்வதேச தரங்களுக்கு இணங்க, இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையின் புத்தாக்கங்களை மதிப்பீடு செய்தல், அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் தேசிய மட்டத்தில் சிறந்த திறமைகளை இனங்காணுதல் என்பன இந்த விருது வழங்கும் விழாவின் பிரதான நோக்கங்களாகும்.
ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும், அரச துறையின் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளைப் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் சமர்ப்பிப்பதற்கும் முகாமைத்துவம் செய்வதற்கும் உதவும் டிஜிட்டல் கட்டமைப்பான ‘IntegrityLink – IAU Monitor’, அரச துறை மற்றும் அரசாங்கத்தின் கீழுள்ள ‘பிரஜைகள் சேவைகள்’ பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றது.
டிஜிட்டல் முறைமைகள் ஊடாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்தக் கட்டமைப்பு ஊடாக, அங்கீகரிக்கப்பட்ட அரச அலுவலர்கள் முறையான பொறிமுறை மூலம் அத்தகைய முறைப்பாடுகளைக் கண்காணித்தல், மதிப்பீடு செய்தல், பரிசோதித்தல் மற்றும் அவற்றுக்கான அவசியமான பதில்களை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.
மேலும், ‘Litigation Management System (LMS)’ இற்காக அரச துறை மற்றும் அரசாங்கத்தின் கீழுள்ள டிஜிட்டல் அரச நிர்வாகப் பிரிவின் தகைமை விருதும் (Merit Award) ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்தது.
அரச நிறுவனங்கள் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் இணக்கப்பாட்டு நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வதற்கு இந்தக் கட்டமைப்பு பொதுத் தளத்தை வழங்குவதுடன், இதன் மூலம் வழக்கு நடவடிக்கைகளைக் கண்காணித்தல், அறிக்கையிடல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் விரைவான மற்றும் தகவல்களுடன் கூடிய தீர்மானங்களை மேற்கொள்வதற்குத் தேவையான ஆதரவு வழங்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகம் இம்முறை விருதுகளை வென்றெடுத்தமை, 2025 ICT விருது விழாவில் பல சிறந்த வெற்றிகளை அடைந்ததற்குப் பின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கு ஜனாதிபதி நிதியத்தின் e-Services தேசிய கட்டமைப்புக்காக அரச துறையின் மிகச் சிறந்த தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனைக்கான விருதும் (Public Sector Most Outstanding ICT Achievement Award), அரச துறை மற்றும் அரசாங்கத்தின் கீழுள்ள பிரஜைகள் சேவைகள் பிரிவில் வெண்கல விருதும் கிடைத்தது. i need captions




