2026 November 6, Friday ⛅ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் அனுமதிப்பத்திர சர்ச்சை!

உள்ளூர்September 17, 2026 · 2 months முன்9
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் அனுமதிப்பத்திர சர்ச்சை!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பேருந்துகளுக்கு சட்டவிரோதமான முறையில் வீதி அனுமதிப்பத்திரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை சட்டபூர்வ நடைமுறைகளுக்கு அப்பால், வருடாந்தக் கட்டணங்களை ஒரே தடவையில் அறவிடாமல் வழங்கியமையே முன்னாள் தலைவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். 

இதற்கமைய, சந்தேகநபர் இன்று (17) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.