2026 November 6, Friday ⛅ கொழும்பு 24° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

2 மில்லியன் டொலர் விசாரணையில் நாமல் மீது நீதிமன்ற உத்தரவு!

உள்ளூர்September 16, 2026 · 2 months முன்10
2 மில்லியன் டொலர் விசாரணையில் நாமல் மீது நீதிமன்ற உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக, சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இந்நிலையிலேயே அவருக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரின் பிணைக் கோரிக்கை தொடர்பான தீர்மானமும் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்றும் நீதவான் தெரிவித்துள்ளார். 

இங்கு விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.