2026 October 18, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சுரேஷ் சலேயின் மனுவுக்கு எதிராக பேராயர் இடையீட்டு மனுத் தாக்கல்

உள்ளூர்July 16, 2026 · 3 months முன்6
சுரேஷ் சலேயின் மனுவுக்கு எதிராக பேராயர் இடையீட்டு மனுத் தாக்கல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் தம்மையும் ஒரு தரப்பினராக இணைத்துக்கொண்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி வழங்குமாறும், சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவை நிராகரிக்குமாறும் பேராயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.