2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!

இலங்கை கடற்படையின் புதிய தளபதி பிரதமருடன் சந்திப்பு!

உள்ளூர்July 16, 2026 · 1 month முன்3
இலங்கை கடற்படையின் புதிய தளபதி பிரதமருடன் சந்திப்பு!

இலங்கை கடற்படையின் 27ஆவது தளபதியாகப் பதவியேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (16) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். புதிய தளபதியாகப் பதவியேற்ற பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை அவர் சந்திக்கும் முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வு இதுவாகும்.

இச்சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கை கடற்படையின் பங்களிப்பு, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன்புரிச் சேவைகளிலும் கடற்படை ஆற்றிவரும் தனித்துவமான பணிகளைப் பிரதமர் இதன்போது பாராட்டியதுடன், வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவின் புதிய கடமைகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.