2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு!

உள்ளூர்July 5, 2026 · 1 month முன்4
உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு!

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களான doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகியவற்றின் ஊடாகத் தங்களது பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த மீளாய்வு பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் அல்லது பிரச்சினைகள் காணப்படின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்காக, 1911 என்ற உடனடி அவசர அழைப்பு இலக்கத்தையோ அல்லது 011 27 84 208, 011 27 84 537 மற்றும் 011 27 85 922 ஆகிய தொலைபேசி இலக்கங்களையோ தொடர்புகொள்ளுமாறு இலங்கை பரீட்சைத் திணைக்களம் பரீட்சார்த்திகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.