2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

டெங்கு பரவல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிகபட்ச பாதிப்பு!

உள்ளூர்July 5, 2026 · 3 months முன்5
டெங்கு பரவல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிகபட்ச பாதிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 59,000 ஐத் கடந்துள்ளது. 

இதற்கமைய, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 59,638 ஆகும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கடந்த ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த நோயாளர்களின் எண்ணிக்கை 21,546 ஆகும். 

இதேவேளை, ஜூலை மாதத்தின் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 4,251 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், இதற்கமைய அந்த மாகாணத்தில் இருந்து 31,249 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 9,507 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,172 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.