2026 October 10, Saturday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

16 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

உள்ளூர்May 14, 2026 · 5 months முன்6
16 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலையால், 5 மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும், 11 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளையில் பசறைக்கும், காலியில் நெலுவ பிரதேசத்துக்கும், களுத்துறையில் அகலவத்தை, பதுரலிய, மதுகம, ஹொரணை மற்றும் வளல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில், பஸ்பாகே கோரளை, யட்டிநுவர, உடபளாத்த, பாத்தஹேவஹேட, பன்வில, கங்க இஹலகோரல, கங்கவட்டகோரல மற்றும் அக்குரண ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரியில் பெல்மதுல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.