2026 September 23, Wednesday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
“மயிலத்தமடு–மாதவனை என்று பேசி களைத்துவிட்டோம்” – சாணக்கியன்மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்இலங்கைக்கு அனுப்பப்பட்ட குஷ், ஹசீஸ் சிக்கியது!ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது – இலங்கையில் மழை தொடரும்!உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழியச் சிறை!இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!

தவெக வெற்றிக்கு அஜித் பாராட்டு!

பல்சுவைMay 5, 2026 · 5 months முன்8
தவெக வெற்றிக்கு அஜித் பாராட்டு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் தயாராகியுள்ளது. இந்த வெற்றி, தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு துறைகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, நடிகர் அஜித்குமார் தொலைபேசி மூலம் நேரடியாக விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, தனுஷ், விக்ரம் ஆகியோரும், இசையமைப்பாளர்கள் அனிருத், யுவான் சங்கர் ராஜா, தமன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் விஜயின் வெற்றியை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

திரையுலகிலிருந்து கிடைத்த இந்த பரவலான ஆதரவு, விஜயின் அரசியல் பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.