2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பேருந்து டிக்கெட் முன்பதிவு இப்போது ஆன்லைனில் – வெறும் ரூ.30!

உள்ளூர்May 5, 2026 · 3 months முன்0

இலங்கையில் நீண்ட தூர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்காக, இணையவழி (Online) இருக்கை முன்பதிவு செய்யும் புதிய முன்னோடித் திட்டத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

தினசரிப் பயன்பாட்டில் தொடருந்துகளைக் காட்டிலும் பேருந்துகளே மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்ய பேருந்து நிலையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய சிரமத்தைத் தவிர்த்து, பயணங்களை முன்கூட்டியே திறம்பட திட்டமிட இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தனியார் பேருந்து சேவைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், மாக்கும்புர பல்முனைய போக்குவரத்து மையம், காலி மற்றும் கண்டி ஆகிய முக்கிய மையங்களில் செயல்படுத்தப்படுகிறது.

பயணிகள் www.busticket.gov.lk என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 0112 001 266 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டோ தங்கள் இருக்கைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், மாகும்புர மையத்தில் இதற்கான நேரடி உதவியும் வழங்கப்படுவதுடன், இந்தச் சேவைக்காக சுமார் 30 ரூபா மட்டுமே கட்டணமாக அறவிடப்படுகிறது.