2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

பெற்றோலிய விநியோகஸ்தர்கள் அதிரடி முடிவு !

உள்ளூர்April 5, 2026 · 4 months முன்1

எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகளைப் பாதிக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்து, நாளை காலை 9.30 மணிக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர் சங்கம் அறிவித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விநியோக முறைமையினால் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பெற்றோலிய விநியோகஸ்தர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா தெரிவிக்கையில்,

தற்போது பின்பற்றப்படும் ‘ஒற்றை-இரட்டை’ இலக்க எரிபொருள் விநியோக முறையினால் ஊழியர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன், நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

புதிய நிர்வாகத்தினால் எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத இலாபப் பங்கு (Dividend) நீக்கப்பட்டுள்ளமைக்கு சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

டீசல் மற்றும் பெற்றோல் விநியோகங்கள் திட்டமிட்டபடி நடைபெறாமையினால் எரிபொருள் நிலையங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.