2026 October 27, Tuesday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

லியோ பட வசூல் சாதனையை முறியடித்த ரஜினியின் கூலி

பல்சுவைSeptember 3, 2025 · 1 year முன்4
லியோ பட வசூல் சாதனையை முறியடித்த ரஜினியின் கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் சுதந்திர தின ஸ்பெஷலாக கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது.

விஜய்யின் லியோ படத்திற்கு பிறகு ரஜினி நடித்த இப்படம் செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினியுடன், நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர்கான், சௌபின் சாஹிர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ரூ. 500 கோடி தாண்டிய வசூல் வேட்டையில் கூலி படம் உள்ளது.

முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி மற்றும் விஜய் படங்களுக்கு எப்போதுமே வசூல் சாதனைகள் குறித்த விவாதம் இருக்கும். அப்படி தான் எல்லா இடங்களிலும் லியோ Vs கூலி படங்களில் பாக்ஸ் ஆபிஸ் பேசப்படுகிறது.

தற்போது அப்படி ஒரு தகவல் தான் அதாவது மலேசியாவில் விஜய்யின் லியோ பட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை முறியடித்துள்ளது ரஜினியின் கூலி. மலேசியாவில் ரஜினியின் கூலி RM 13.85 மில்லியன் வசூலித்துள்ளதாம்.