2026 October 27, Tuesday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

யாத்திரையில் ஜனாதிபதியின் செயலாளர் இணைவு

உள்ளூர்September 3, 2025 · 1 year முன்4
யாத்திரையில் ஜனாதிபதியின் செயலாளர் இணைவு

கோட்டை சம்புத்தாலோக விகாரைக்கு அருகாமையில் இன்று காலை ஆரம்பமான பிண்டபாத யாத்திரை ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது.

இதன்போது மகா சங்கத்தினருக்கு, பிரிகர வழங்கும் பூஜையில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இணைந்து கொண்டார்.

நாடளாவிய ரீதியில் தொலைதூரப் பிரதேசங்களில் அமைந்துள்ள பிரிவேனா மற்றும் பௌத்த அறநெறிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனுக்கான உதவிகளைப் பெறுவதற்காக, கண்டி பௌத்த மற்றும் நலன்புரிச் சங்கம் வருடாந்தம் இந்தப் பிண்டபாத யாத்திரையை ஏற்பாடு செய்து வருகின்றது.

இம்முறை, நூறு தேரர்கள் பிண்டபாத யாத்திரையில் கலந்து கொண்டதுடன், கொழும்பு கோட்டையில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்கள் வீதியின் இருமருங்கிலும் ஒன்று கூடி மகா சங்கத்தினருக்கு பிரிகர வழங்கும் பூஜையில் ஈடுபட்டனர்.