2026 August 15, Saturday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

அனர்த்த நிவாரண நிதியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

உள்ளூர்December 30, 2025 · 8 months முன்0

அதிகரிக்கப்படும் அனர்த்த நிவாரண நிதிஅனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களை கட்டியெழுப்பும் வகையில் அதற்கான அனர்த்த நிவாரண நிதியை அதிகரிக்க அமைச்சரவை இணங்கியுள்ளது.

இதற்கமைய அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட அனைத்து வர்த்தர்களுக்கு 6 மாதகால சலுகை காலமொன்றுடன் 3 வருடங்களுக்குள் செலுத்தும் வகையில் நுண் நிறுவனங்களுக்கென அதிகபட்சமாக 250,000 ரூபாவை கடந் நிவாரணமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறியளவிலான வர்த்தகர்களுக்கு அதிகபட்சமாக ஒரு மில்லியனும் மத்திய மற்றும் நடுத்தரளவிலான வர்த்தகர்களுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபாவையும் 3 வீத வருட வட்டி அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற வணிக வங்கி மற்றும் விசேட வங்கிகள் ஊடாக கடன் நிவாரணமாக பெற்றுக்கொடுக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.