மியூனிக் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

ஜேர்மனியில் உள்ள மியூனிக் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையத்தை அண்மித்து, ஆளில்லா விமானங்கள் பறந்த நிலையில், விமான நிலைய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி சுமார் 17 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் 15 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதனால் சுமார் 3,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகஸ் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன




