2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

தணமல்வில – வெல்லவாய வீதியில் விபத்து ; ஒருவர் பலி ; 6 பேர் காயம்!

உள்ளூர்October 3, 2025 · 11 months முன்2
தணமல்வில – வெல்லவாய வீதியில் விபத்து ; ஒருவர் பலி ; 6 பேர் காயம்!

தணமல்வில – வெல்லவாய வீதியில் 288ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும், தணமல்வில பகுதியிலிருந்து வெல்லவாய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


காயமடைந்தவர்கள் தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதொடு விபத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுயைடவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்


வேனின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.