2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜப்பானில் அதிவேக நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்.

உலகம்December 27, 2025 · 8 months முன்1
ஜப்பானில் அதிவேக நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்.

ஜப்பானில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 26 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதுடன், சம்பவ இடத்தில் பெரும் தீப்பற்றலும் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பாதை தெளிவில்லாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனங்களில் பயணிகள் போக்குவரத்து, பேருந்துகள், லாரிகள் மற்றும் பல சிறிய மோட்டார் வாகனங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தச் சாலையில் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக ஜப்பான் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.