2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

இன்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.

உள்ளூர்December 28, 2025 · 8 months முன்3
இன்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.

இன்று (28) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபரகமுவ மாகாணம், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கு மேல் கனமழை பதிவாகலாம்.

மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு பகுதி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை, திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேற்கு, சபரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையால் ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வானிலை ஆய்வு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.