2026 October 22, Thursday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

2026 இலும் தொடரும் பாடசாலை மாணவிகளுக்கான வேலைத்திட்டம்

உள்ளூர்March 24, 2026 · 7 months முன்4
2026 இலும் தொடரும்  பாடசாலை மாணவிகளுக்கான வேலைத்திட்டம்

வயது வந்த பாடசாலை மாணவிகளின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டிலும் அவர்களுக்கு இலவச சுகாதார அணையாடை  (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாணவிக்கும் தலா 720 ரூபாய் பெறுமதியான இரண்டு பரிசுச் சீட்டுகள் (Gift Certificates) வழங்கப்படும். இதன் மூலம் ஒரு மாணவிக்கு வருடாந்தம் 1,440 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் கிடைக்கப்பெறும்.

இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி மாணவிகள் தமக்குத் தேவையானசுகாதார சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்ய முடியும்.(உதாரணமாக, 120 ரூபாய் பெறுமதியான 12 பக்கெட்டுகள் அல்லது 180 ரூபாய் பெறுமதியான 8 பக்கெட்டுகள் வரை பெற்றுக்கொள்ளலாம்).