2026 October 20, Tuesday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும் வாட்ஸ்அப்

தொழில்நுட்பம்March 27, 2026 · 7 months முன்15
புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும்  வாட்ஸ்அப்

பயனர்களின் அன்றாட தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அலுவலகப் பணிகளைத் தனித்தனியாக நிர்வகிப்பதற்கும், உரையாடல்களை மெருகூட்டுவதற்கும் இந்த புதிய கருவிகள் உதவும் என வட்ஸ் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.

இதுவரை அண்ட்ரோய்ட் பயனர்களுக்குக் கிடைத்து வந்த ‘ஒரே கைபேசியில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தும் வசதி’ இப்போது ஐபோன் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை அனுப்பும் முன்னரே அவற்றைச் செம்மைப்படுத்த ‘மெட்டா ஏஐ’ (Meta AI) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் புகைப்படத்தின் பின்னணியை மாற்றுவதற்கோ அல்லது தேவையற்ற பகுதிகளை அகற்றுவதற்கோ முடியும். எனினும், இந்த வசதி தற்சமயம் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.