2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல்!

உள்ளூர்May 14, 2026 · 5 months முன்4
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல்!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெர்கஸ்வோல்ட் தோட்டத்தின் மேற்பகுதியில் இன்று தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 பெண்கள் உடனடியாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட மருத்துவ அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்ததாவது, காயமடைந்த அனைவரும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகும்.

தோட்டத்தின் மேற்பகுதியில் உள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு மீது பருந்தொன்று தாக்குதல் நடத்தியதையடுத்து, அதனால் ஆத்திரமடைந்த குளவிகள் அருகில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தோட்ட நிர்வாகத்தின் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காயமடைந்த பெண்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.