2026 September 27, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
வட மாகாணத்தின் சிறந்த பிரதேச செயலகங்கள் கௌரவிக்கப்பட்டன.IMF உறவை திடீரென துண்டித்தால் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படலாம் என எச்சரிக்கை.வியட்நாம் இரண்டாம் இடம், லாவோஸ் மூன்றாம் இடம்.எல்நினோ–லாநினா மாற்றங்களை தீவிரமாக கவனிக்க வேண்டும் – சஜித்.மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நினைவேந்தலில் பங்கேற்றார்.அரச வழக்குகளை கண்காணிக்கும் LMS கட்டமைப்புக்கு Merit Award.மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி நிதியத் திட்டம் விரிவாக்கம்.சீர்திருத்தப் பள்ளி விவகாரத்தில் HRCSL நடவடிக்கை!

IMF உறவை திடீரென துண்டித்தால் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படலாம் என எச்சரிக்கை.

உள்ளூர்September 27, 2026 · 40 minutes முன்2
IMF உறவை திடீரென துண்டித்தால் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படலாம் என எச்சரிக்கை.

 2027ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தைக் கைவிட்டால், நாடு மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கக்கூடும் என ‘தினன தகுண’ அமைப்பு எச்சரித்துள்ளது. 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவ்வமைப்பு, நாடு தற்போதுதான் பொருளாதார மீட்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், இந்த நேரத்தில் சர்வதேச நிதியக் கட்டமைப்பில் இருந்து விலகும் வகையிலான அரசியல் பேச்சுகளை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

2027 மார்ச் மாதத்துடன் தற்போதைய நிதி உதவித் திட்டம் நிறைவடைகிறது. இதன் பின்னர் IMF உடனான உறவைத் திடீரெனத் துண்டிக்க அரசாங்கத்தின் சில தரப்புகள் முயல்வது ஆபத்தான செயலாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. 

IMF விதிக்கும் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுயமாகப் பொருளாதாரத்தை நடத்திச் செல்ல முடியும் என நினைப்பது நாட்டின் நிஜமான நிதி நிலைமையைப் புறக்கணிப்பதாகும். 

நாடு மீண்டும் வாக்கு வங்கி அரசியலுக்காக முறையற்ற நிவாரணங்களை வழங்கத் தொடங்கினால், கஷ்டப்பட்டு அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மை அழிந்துவிடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்‌துள்ளது. 

மேலும், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சில பொருளாதார நிவாரணங்கள் உண்மையில் வீண் நிதி இழப்புகளே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.