2026 October 17, Saturday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அழிவடையும் மரக்கறிகள்

உள்ளூர்March 30, 2026 · 7 months முன்3
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அழிவடையும் மரக்கறிகள்

எரிபொருள் தட்டுப்பாட்டினால் மொத்த வியாபாரிகள் சந்தைக்கு வருகை தர முடியாதமையால் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் கிலோ கிராம் மரக்கறிகள் மற்றும் பழங்கள் பழுதடைவதாக தேசிய மரக்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள 13 விசேட பொருளாதார நிலையங்களுக்கு சுமார் 3 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் தமது விளைச்சலை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நேற்று மாத்திரம் சுமார் 20 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் சந்தைக்கு கிடைத்த போதிலும் வியாபாரிகள் வருகை தரதாத காரணத்தினால் போட்டித் தன்மை குறைந்து மரக்கறி விலைகளும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.