2026 November 12, Thursday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசலுடன் இருவர் கைது

உள்ளூர்March 20, 2026 · 8 months முன்4
பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசலுடன் இருவர் கைது

ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 720 லீற்றர் டீசலுடன் இரு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த டீசல் கையிருப்பு விற்பனை செய்யும் நோக்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்திற்குள் கேன்கள் மற்றும் சுமார் 40 பீப்பாய்களில் இந்த டீசல் கையிருப்பு சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.