2026 November 12, Thursday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 24° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நிறைவு பெற்றது மனுஷ நாணயக்கார விசாரணை

உள்ளூர்March 20, 2026 · 8 months முன்3
நிறைவு பெற்றது மனுஷ நாணயக்கார விசாரணை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. 

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது. 

இதன்போது, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக விசாரணைப் கோப்புகள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.