2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ரஷ்யாவுக்கு நேட்டோ எச்சரிக்கை !

உலகம்September 24, 2025 · 11 months முன்1
ரஷ்யாவுக்கு நேட்டோ எச்சரிக்கை !

தங்கள் உறுப்பு நாடுகளின் வான் எல்லைகளைப் பாதுகாக்க எந்த வழிமுறையையும் பயன்படுத்துவோம் என்று ரஷ்யாவுக்கு நேட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேட்டோவில் அங்கம் வகிக்கும் போலந்து மற்றும் எஸ்டோனியா வான் எல்லைகளில் ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் போா் விமானங்கள் அத்துமீறியதைத் தொடா்ந்து நேட்டோ இந்த எச்சரிக்கையை நேற்று (23) விடுத்துள்ளது.

– இது குறித்து நேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேட்டோ வான் எல்லையை நாங்கள் பாதுகாப்போம். ரஷ்யாவுக்கு இதில் எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது. சா்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவோம்.

எல்லா திசைகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையும் தடுப்போம். பதிலடி கொடுப்பதற்கான முறை, நேரத்தை நாங்கள்தான் தோ்ந்தெடுப்போம்.

நேட்டோவின் எந்த ஓா் உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்ற அமைப்பின் 5-ஆவது விதியை ரஷ்யா நினைவில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.