இஸ்ரேல் ஜனாதிபதி – பிரித்தானிய பிரதமர் சந்திப்பு.

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் – பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கட்டார் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலை பிரித்தானிய பிரதமர் கண்டித்துள்ளதோடு இந்தத் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளார்.
மேலும், இச்சந்திப்பில் இருவருக்கும் இடையே சில கருத்தியல் வேறுபாடுகளும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.