2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!

நாளை வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் “கூலி”

BREAKINGபல்சுவைAugust 13, 2025 · 1 year முன்1
நாளை வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் “கூலி”

தென்னிந்தியா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி, நாளை 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் வெளியாகும் திரைப்படம் “கூலி”

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- பொலிவுட் நட்சத்திர நடிகர் அமீர்கான் – தெலுங்கு நட்சத்திர நடிகர் நாகார்ஜுனா – கன்னட நட்சத்திர நடிகர் உபேந்திரா – மலையாள நட்சத்திர நடிகர் சௌபின் சாஹிர் – ஸ்ருதிஹாசன் என இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்கள் நடித்திருப்பதாலும் தொடர்ந்து வசூல் ரீதியான வெற்றி படங்களை வழங்கி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி இருப்பதாலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களின் அதிகரித்து காணப்படுகின்றது.

இந் நிலையில், இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கு பற்றிய நடிகர் நாகார்ஜுனா பேசுகையில், ” சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் – அவர் நடிப்பில் வெளியான பாட்ஷா படத்தின் 100 மடங்குக்குச்சமம்” என தெரிவித்துள்ளார். நாகார்ஜுனா வின் இவ் கருத்தானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.