2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மீசைய முறுக்கு 2 அப்டேட் !

பல்சுவைSeptember 2, 2025 · 1 year முன்3
மீசைய முறுக்கு 2 அப்டேட் !

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய “ஹிப் ஹாப் தமிழா ஆதி” தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது. இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய அந்த படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கவிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என அனைத்தையும் “ஹிப் ஹாப் ஆதி” மேற்கொள்கிறார்.

சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, மீசைய முறுக்கு 2 படத்தையும் தயாரிக்க உள்ளனர்.