ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று!

நாட்டில் 2025 ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகை இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் மாதத்திற்காக மொத்தம் 1,421,745 பயனாளி குடும்பங்களின் கணக்குகளில் 11,275,973,750 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.
அதன்படி, பயனாளிகள் தங்களுக்குச் சேர வேண்டிய உதவித்தொகையை இன்று முதல் தங்களது அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




