2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

உலகம்August 15, 2025 · 1 year முன்1
நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

இந்தியா இன்று தனது 79 சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும் என்று அறி​வுறுத்தியுள்​ளார்.

கடந்த 1947 ஆம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​கள் உதய​மாகின. இரு நாடுகளுக்குமிடையிலான பிரி​வினை​யின்​போது ஏற்​பட்ட வன்​முறை சம்​பவங்​களில் சுமார் 20 லட்​சம் பேர் உயி​ரிழந்​தனர். சுமார் 2 கோடிக்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர்.

இதை நினை​வு​கூரும் வகை​யில் ஓகஸ்ட் 14 ஆம் திகதி, பிரி​வினை கொடுமை​கள் நினைவு தின​மாக அறிவிக்​கப்​பட்​டது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந் நிலையில், பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில்,

இந்த தினம் இந்​திய வரலாற்​றில் மிக​வும் துயர​மான நாள் ஆகும். நாட்டில் பெரும் எண்​ணிக்​கையி​லான மக்​கள் துன்​பம், வேதனை​களை அனுப​வித்​தனர். கற்​பனைக்கு எட்​டாத வகை​யில் மிகப் ​பெரிய இழப்​பு​களை எதிர்​கொண்​டனர்.

எனினும் தாங்க முடி​யாத வலி, வேதனையை மக்​கள் துணிச்​சலுடன் எதிர்​கொண்​டனர். வீழ்ச்​சி​யில் இருந்து எழுச்சி பெற்ற மக்​கள், வளர்ச்​சிப் பாதை​யில் பல்​வேறு மைல்​கற்​களை எட்டி புதிய சாதனை​களை படைத்​தனர். இந்த நாள் நமக்கு ஒரு படிப்​பினையை கற்​றுத் தரு​கிறது. நாம் சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும். இதன்​மூலமே நாட்​டின் ஒற்​றுமையை வலுப்​படுத்த முடி​யும் என்று குறிப்பிட்டுள்ளார்.