2026 October 23, Friday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தங்க விலை இன்று மீண்டும் அதிகரிப்பு

உள்ளூர்September 2, 2025 · 1 year முன்2
தங்க விலை இன்று மீண்டும் அதிகரிப்பு

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்று (01) தங்கம் பவுண் ஒன்றிற்கு 6,000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் 2,000 ரூபாயால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை 274,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்று 280,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது.

இந்தநிலையில், இன்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றிற்கு 2,000 ரூபாயால் அதிகரித்து, 282,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (02) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 282,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 260,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.