2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

டீசலின் விலை குறைப்பு : பிரதி அமைச்சர் கருத்து

உள்ளூர்September 2, 2025 · 12 months முன்0
டீசலின் விலை குறைப்பு : பிரதி அமைச்சர் கருத்து

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஓரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவினால் குறைத்துள்ளது என பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றுக் கொண்ட போது ஒரு லீற்றர் டீசலின் விலை 363 ரூபாவாக காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதனைத் தொடர்ந்து டீசலின் விலை இவ்வாறு லீற்றர் ஒன்றுக்கு 120 ரூபா என்ற அடிப்படையில் குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை உள்ளிட்ட ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளும் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்னர் வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 307 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 352 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி இறுதியாக மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தங்களின் போது வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 283 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 313 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசாங்கத்தின் முக்கிய பிரதி அமைச்சர் ஓருவர் விலை மாற்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்து சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் சில முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் வகையில் சில சர்ச்சை கருத்துக்களை வெளியிடும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.