2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ☀️ மட்டக்களப்பு 31°
LIVE
20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

துசித ஹல்லொலுவவிற்கு பிடியாணை உத்தரவு

உள்ளூர்November 13, 2025 · 9 months முன்1
துசித ஹல்லொலுவவிற்கு பிடியாணை உத்தரவு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக துசித ஹல்லொலுவ பெயரிடப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபரான துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

இதையடுத்து, நீதவான் இந்த பிடியாணையைப் பிறப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.