2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

முதல் நாள் உலகளவில் காந்தா செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

பல்சுவைNovember 16, 2025 · 9 months முன்1
முதல் நாள் உலகளவில் காந்தா செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் துல்கர் சல்மான். எப்போதும் தரமான திரைப்படங்களில் நடித்து இரசிகர்களின் நம்பிக்கையை சம்பாதித்து இருக்கும் இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் காந்தா.

இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார். துல்கர் உடன் இணைந்து சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்கியஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிலர் கலவையான விமர்சனங்களையும் கூறியுள்ளனர். இந்த நிலையில், முதல் நாள் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் நாள் உலகளவில் காந்தா படம் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.