2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

வாகன குத்தகை வசதிகளுக்கான விகிதங்களில் மாற்றம்

உள்ளூர்November 9, 2025 · 9 months முன்2
வாகன குத்தகை வசதிகளுக்கான விகிதங்களில் மாற்றம்

வாகனங்களுக்கான குத்தகை வசதிகளை வழங்குவதற்கான வீதங்களை திருத்தம் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதன்படி, தற்போது வணிக வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை வீதம் 70% ஆகவும், தனியார் வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை வீதம் 50% ஆகவும் திருத்தம் செய்ய இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஜூலை மாதம், இலங்கை மத்திய வங்கி குத்தகை வசதிகளுக்கான கடன் வீதங்களை வணிக வாகனங்களுக்கு 80%, தனியார் வாகனங்களுக்கு 60%, முச்சக்கர வண்டிகளுக்கு 50%, மற்றும் ஏனைய வாகனங்களுக்கு 70% எனவும் அறிவித்திருந்தது.

எனினும், கடந்த ஜூலை மாதம் நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட கடன் வீதங்கள், தற்போது இரண்டு பிரிவுகளின் கீழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

அதில், ஒரு பிரிவை வணிக வாகனங்கள் என்றும், மற்றைய பிரிவை கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் என்றும் மத்திய வங்கி பிரித்துள்ளது.