2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஒரு வருடத்தின் பின் கழிவறை குழியிலிருந்து சடலம் மீட்பு..!

உள்ளூர்November 9, 2025 · 9 months முன்0
ஒரு வருடத்தின் பின் கழிவறை குழியிலிருந்து சடலம் மீட்பு..!

கம்பஹா, இந்துருகல்ல பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொலை செய்யப்பட்டு, கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இந்துருகல்ல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய திருமணமான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை கடந்த 2024.09.08 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், காணாமல் போனமை குறித்து உயிரிழந்தவரின் சகோதரரால் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

சுமார் ஒரு வருட விசாரணையின் பின்னர் வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பொலிஸார் கடந்த 06 ஆம் திகதி மூன்று நபர்களைக் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது கொலையின் பின்னணி அம்பலமானது.

கொலை செய்யப்பட்ட நபரும் கைது செய்யப்பட்ட இந்த மூவரும் ஒன்றாகச் சேர்ந்து மது விருந்து நடத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இந்தக் கொலை இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவரைத் தடியால் தாக்கி, பின்னர் சடலத்தைக் கழிவறை குழியினுள் போட்டு மூடியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தமை குறிப்பிடத்தக்கது.