2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

கனடாவிலிருந்து யாழ் வந்த சயினகா உயிரிழப்பு!

உள்ளூர்September 8, 2025 · 11 months முன்2
கனடாவிலிருந்து யாழ் வந்த சயினகா உயிரிழப்பு!

கனடாவில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவர் சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சதீஸ்வரன் சயினகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி – கல்லுவம் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் நாளை திங்கள் கிழமை கல்லுவத்தில் உள்ள அன்னாரின் பூர்வீக வீட்டில் இடம்பெறவுள்ளது.

குறித்த சிறுமியின் திடீர் மரணத்தால் வடமராட்சி கல்லுவம் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளது.