மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் நீடிப்பு.

நாட்டில் மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
அதேநேரம், மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை எதிர்த்து மின்சார தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய மின்சார சபைச் சட்டத்தின் பாதகமான விளைவுகளை எதிர்த்து தொடர்ந்தும் போராடுவோம். என மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




