நுவரெலியாவில் பஸ் – லொறி விபத்து : ஒருவர் படுகாயம்.

நுவரெலியா – இராகலை பிரதான வீதியில் இன்று (20) காலை தனியார் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




