2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விடுதி உரிமையாளரை கொல்ல முயன்றவர் கைது!

உள்ளூர்November 19, 2025 · 9 months முன்0
விடுதி உரிமையாளரை கொல்ல முயன்றவர் கைது!

வெலிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் பிரவேசித்த சந்தேகநபர் ஒருரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுப் பணிப்பாளரின் தலைமையிலான குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் டி-56 ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.