2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் விசேட கலந்துரையாடல்

உள்ளூர்November 19, 2025 · 9 months முன்2
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் விசேட கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இங்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருகோணமலை பிரதேசத்தில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை தடுப்பதற்காக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் இங்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன், சிவநேசன், சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.