2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

இன்று கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்!

உள்ளூர்January 9, 2026 · 7 months முன்2
இன்று கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்!

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு நோக்கி நகர்ந்து இன்று (09) மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அம்பாந்தோட்டைக்கும் கல்முனைக்கும் இடையில் இலங்கைக் கரையை கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும், சில வேளைகளில் மணித்தியாலத்திற்கு 70 கி.மீ வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.