2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

இன்றைய பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

உள்ளூர்January 8, 2026 · 7 months முன்2

இன்றைய (08) பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமானது.

இன்றைய சபை நடவடிக்கைகளின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு அமைந்துள்ளது,

காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையான காலப்பகுதி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையான விதிகளின் கீழான பாராளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழ் விசேட வினாக்கள் எழுப்பப்படவுள்ளன.

இன்றைய தினத்தின் பிரதான நடவடிக்கையாக, காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.

சபை நடவடிக்கைகளின் இறுதியாக, மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.