2026 November 1, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

உள்ளூர்January 30, 2026 · 9 months முன்7
கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வரை காணப்படும். களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45-50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலும் உள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவுக்கு கொந்தளிப்பாகக் காணப்படும். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான கொந்தளிப்புடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அச்சமயங்களில் அக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.