2026 November 1, Sunday ⛅ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

உள்ளூர்January 30, 2026 · 9 months முன்3
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  பலர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது சுமார் 29744 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 18 பேரும், சந்தேகத்தின் பேரில் 560 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 297 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 161 பேரும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 78 சாரதிகளும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 428 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4473 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.