2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
நாமலை சந்திக்க வெலிக்கடை சென்ற ஷிராந்தி!சத்யா நிகேதனில் கட்டிடம் சரிந்து பெரும் விபத்து!ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

உள்ளூர்August 8, 2026 · 4 weeks முன்2
நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பதிவான மொத்த நோயாளர்களில் 52.94% அதாவது 47,136 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.

 மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 18,922 நோயாளர்கள் (21.25%) பதிவாகியுள்ளனர்.கொழும்பு மாவட்டத்தில் 17,679 நோயாளர்களும் (19.86%), கண்டி மாவட்டத்தில் 6,298 நோயாளர்களும் (7.07%) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 தவிர, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3,569 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,973 ஆகும்.

 இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் 3,686 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து டெங்கு அதி-அபாய வலயங்களாகப் பெயரிட்டுள்ளனர்.