2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாடு முழுவதும் சதொசவில் புதிய விலைகள் அமுல்!

உள்ளூர்August 8, 2026 · 2 months முன்5
நாடு முழுவதும் சதொசவில் புதிய விலைகள் அமுல்!

லங்கா சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதாக  தெரிவித்துள்ளது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட புதிய விலைகளின் படி வெள்ளைப்பூண்டு ரூ.649 ஆகவும் (ரூ.50 குறைப்பு) , பெரிய வெங்காயம் ரூ.224 ஆகவும் (ரூ.35 குறைப்பு) , உருளைக்கிழங்கு ரூ.239 ஆகவும் (ரூ.20 குறைப்பு), நிலக்கடலை ரூ.869 ஆகவும் (ரூ.10 குறைப்பு), வெள்ளை பச்சை அரிசி ரூ.187 ஆகவும் (ரூ. 9 குறைப்பு) குறைக்கப்படடுள்ளது.

அத்துடன் பயறு ரூ. 844 ஆகவும் (ரூ.5 குறைப்பு) ,சிவப்பு பச்சை அரிசி ரூ. 169 ஆகவும் (ரூ.4 குறைப்பு) , வெள்ளை நாடு அரிசி (உள்ளூர்) ரூ.197 ஆகவும் (ரூ.2 குறைப்பு) , கடலை ரூ. 327 ஆகவும் (ரூ.2 குறைப்பு) , உழுந்து ரூ.864 ஆகவும் (ரூ.1 குறைப்பு) குறைக்கப்பட்டுள்ளதாக  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.

திருத்தப்பட்ட விலைகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.