2026 September 8, Tuesday 🌧️ கொழும்பு 30° ☀️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒக்டோபர் 02க்கு ஒத்திவைப்பு!ரூ.53.7 மில்லியன் போ#தைப்பொருளுடன் இரு தாய்லாந்து பிரஜைகள் கைது!ஜனாதிபதியின் கருத்தை எதிர்க்கட்சிகள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்!22வது திருத்தத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உயர்நீதிமன்ற வியாக்கியானம்!இன்று பிற்பகல் வானிலையில் திடீர் மாற்றம்!கொழும்பு–ஜகார்த்தா ஸ்ரீலங்கன் விமானங்கள் இரத்து!58 வயதான ‘வாசனா’ யானைக்கு இனி முக்கிய பெரஹெராக்கள் மட்டும்!கடும் வெப்பம்; யால வனம் தற்காலிகமாக மூடல்!

ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒக்டோபர் 02க்கு ஒத்திவைப்பு!

உள்ளூர்September 8, 2026 · 36 seconds முன்0
ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒக்டோபர் 02க்கு ஒத்திவைப்பு!

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் அழைக்கப்பட்டது. 

இதன்போது, பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான ஷிரான் பாசிக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.